15- வது இந்திய- ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் 15 வது இந்திய ஜப்பான் உச்சி மாநாட்டில் இரண்டு நாள் பயணமாக கலந்து கொள்ள சென்றிருக்கின்றார் இன்று காலை அவர் டோக்கியோ அதற்கு சென்றடைந்தார் ஜப்பான் பிரதமர் சிகரு இசிபா அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இம்மா நாட்டின் போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து மதிப்பாய்வு செய்வார்கள். கடந்த 11 ஆண்டுகளில் சீராக வளர்ந்து வரும் உலகளாவிய கூட்டான்மையின் அடுத்த கட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகளையும் விவாதிப்பார்கள். பிரதமரை ஜப்பானில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவருக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கதக் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். 15 -ஆவது இந்திய -ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி வணிக நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் ஜப்பான் பயணம் சரியான நேரத்தில் நடக்கிறது என்றும் ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பின் நிர்வாக துணை தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்களில் 80 விழுக்காட்டிற்கு அதிகமானவை அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.. பிரதமர் ஜிகரு இஷிபாவுடன் 15 -வது இந்திய ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ,பொருளாதாரம், தொழில்நுட்பம் ,புதுமை போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவு படுத்துவதில் கவனம் செலுத்தும் ,.பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்தாகும்.என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் சீனாவிற்கான தனது பயணம் இந்தியாவின் தேசிய நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை மேலும் மேம்படுத்தும் என்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை பயனுள்ள ஒத்துழைப்பை உருவாக்க பிரதமர் தனது பயணத்திட்டத்தின் அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது இருதலைவர்களும்..இந்தியா- ஜப்பான் பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளில் நோக்கம் மற்றும் லட்சியத்தை வெளிப்படுத்தவும் மற்றும் புதிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முயல்வர். இந்த பயணம் இரு நாடுகளின் மக்களை இணைக்கும் நாகரீக பிணைப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் பயணத்தை அடுத்து பிரதமர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்

Tags :