ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் -உச்சநீதிமன்றத்தில் தவெக மனு!

நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகளால் பெரும் பாதிப்புக்கள் உருவாகிவருகின்றன.இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.இந்த நிலையில் ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டத்தை இயற்றுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tags : ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் -உச்சநீதிமன்றத்தில் தவெக மனு!