தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை - சமத்துவ நாள் உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார்.

இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு ராஜா அண்ணாமலை படத்தில் உள்ள அம்பேத்கர் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு,
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும் சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன் சமத்துவ நாள் உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags :