ஆமைக்கறிக்காக மனைவியைக் கொன்று புதைத்த பயங்கரம்

by Staff / 22-10-2022 12:22:25pm
ஆமைக்கறிக்காக மனைவியைக் கொன்று புதைத்த பயங்கரம்

மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன் பேடிங். இவரது மனைவி சபித்ரி (35). சம்பல்பூர் நகருக்கு தென்மேற்கே 166 கிமீ தொலைவில் உள்ள பத்மல் பஞ்சாயத்தில் உள்ள ரௌத்பரா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு ரஞ்சன் பேடிங் கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார்.ஆமை இறைச்சியை தனது மனைவி சபித்ரியை சமைக்கச் சொன்னார். ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த ரஞ்சன் பேடிங் தனது மனைவியை கொடூரமாக தாக்கிவிட்டு, மயக்கமடைந்த விழுந்த நிலையில், அவர் இறந்தை உறுதி செய்தபின்னர் அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் உடலை வீட்டு கொல்லைப்புறத்தில் புதைத்த பின்னர், கணவர் ரஞ்சன் பேடிங் தனது மனைவியைக் காணவில்லை என்று மக்களிடம் கூறி நாடமாடி வந்துள்ளார்.

தொடர்ந்து, போலீஸ் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து, ஜமன்கிரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம்ஜித் தாஸ் கூறுகையில், உடல் கொல்லைப்புறத்தில் புதைக்கப்பட்டதாகவும், சபித்ரி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஊர் மக்களிடம் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.சபித்ரி காணாமல் போனதையடுத்து அவரது தாயார் பேலீசாரை அணுகிய போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் கிராமத்திற்கு வந்து பேடிங்கிடம் அவரது மனைவி பற்றி கேட்டபோது, ​​​​அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் மற்றும் அப்பகுதியினர் பிடித்து விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories