மத்திய அரசை கண்டித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வந்த நிதியை மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மேலும் மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும், மாநிலங்களுக்கு வழங்கப்படும் பகிர்வை குறைக்க துடிப்பது ஏன்? மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
Tags :