மதுரையில் கஞ்சா போதையில் அட்டகாசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியில் உள்ள கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் போதையில் வீட்டில் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 8 பைக்குகள், கார், ஆட்டோவை அடித்துநொறுக்கி சேதப்படுத்தினர்
மேலும் ஊராட்சி துப்புரவு பணியாளரின் வாகனத்தை தீயிட்டு எரித்ததோடு தட்டிகேட்ட தூய்மை பணியாளர் அந்தோணி ராஜ் மற்றும் பெயிண்டர் விடுதலைவீரன் ஆகியோர் தலையில் அடித்து காயம் - ஒத்தக்கடை அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஒத்தக்கடை காவல்துறையினர் சிசிடிவி கேமிரா காட்சியின் அடிப்படையில் ஒத்தக்கடையை சேர்ந்த முகமது கனி மற்றும் முனீஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : மதுரையில் கஞ்சா போதையில் அட்டகாசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.