திண்டுக்கல் தொழிலாளி நெய்த காட்டன் புடவைக்கு தேசிய விருது.
திண்டுக்கல் மாவட்டம், நல்லாம்பட்டியைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணன் தயாரித்த செய்த காட்டன் சேலை தேசிய கைத்தறி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நல்லாம்பட்டியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலகிருஷ்ணன் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக காட்டன் சேலைகள் நெசவு செய்து கொடுத்து வருகிறார்.
இவர் காட்டன் சேலையில் யானை, மயில், அன்னம், ருத்ராட்சம், மாங்காய் டிசைன் எனப் பிரத்தியேகமாக 3 நாட்கள் நெய்து உருவாக்கினார்.
இந்திய தேசிய கைத்தறி தேர்வு ஆணையத்திற்கு இதை கூட்டுறவு சங்கம் அனுப்பியுள்ளது. அந்த காட்டன் சேலை தேசிய கைத்தறி விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த இவரே முதல் முறையில் இந்த விருதை பெற உள்ளார்.
இவ்விருது ஆகஸ்ட் 7ம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
Tags : திண்டுக்கல் தொழிலாளி நெய்த காட்டன் புடவைக்கு தேசிய விருது.