பிரபல நகைக்கடை வியாபாரி மகன்களை கடத்தி ரூ.70 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்தல்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் பிரபல ஜெயின் ஜூவல்லரி நகைக்கடை வியாபாரி நரேந்திரகுமார். இவரது மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இருவரையும் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ள ஹன்ஸ்ராஜ் என்பவர் பெங்களூரில் இருந்து கூலிப்படையை கொண்டு கடத்தி நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமாரிடம் ரூபாய் 70 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து செல்ல கூடிய நிலையில் பெங்களூரு ரவுடிகளை கொண்டு திருவண்ணாமலை நகை கடை வியாபாரிகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட ஹன்ஸ்ராஜ் மேலும் நரேந்திரகுமாரிடம் 60 லட்சம் கேட்டுள்ளார். கடத்தல் கும்பலுக்கும் நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமாருக்கும் இடைத்தரகராக ஹன்ஸ்ராஜ் செயல்பட்டுள்ளார்.
இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு பெங்களூருக்கு கடத்தி சென்ற நகைக்கடை உரிமையாளர் மகன்களான ஜித்தேஷ், ஹரிஹந்த் மற்றும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடி பெங்களூர் பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 10 லட்சம் மற்றும் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நகைக்கடை வியாபாரத்தில் தொழிலில் நஷ்டம் அடைந்த ஹன்ஸ்ராஜ் திருவண்ணாமலையில் பிரபலமான ஜெயின் ஜுவல்லரி நகைக்கடை அதிபர்களின் மகன்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் ஹன்ஸ்ராஜ் நகை, பணம் உள்ளிட்டவற்றை வைத்து சூதாட்டம் ஆடியதில் ஏமாற்றமடைந்து விரக்தி அடைந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி பில்லா, விக்ரம், மனோ என்கிற கபாலி, வாசிம் ஆகியோர்களை அழைத்து வந்து நேற்று இரவு 10.53 மணி அளவில் ஜெயின் ஜுவல்லரி நரேந்திரகுமார் மகன்களான ஜித்தேஷ் மற்றும் ஹரிஹந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை நகரில் உள்ள ராமலிங்கனார் தெரு அருகே வழிமடக்கி அடித்து தாக்கி கார் மூலம் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
காவல் துறையினர் பெங்களூரில் இருந்து வந்த பிரபல கடத்தல் கும்பலை மறைவான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : பிரபல நகைக்கடை வியாபாரி மகன்களை கடத்தி ரூ.70 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்தல்.