பச்சிளம் குழந்தை விற்கப்பட்டவிவகாரம்:9பேர் கைது

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் 28 வயதான கலைச்செல்வி. இவருக்கு ஒருவயதில் பெண் குழந்தை உள்ளது. கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாமல் இருந்துள்ளார். அந்த பெண்ணிற்கு வேறு திருமணம் செய்துவைக்க திட்டமிட்ட தாத்தா கருப்பசாமி, குழந்தையை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். பவானியை சேர்ந்த கார்த்தி என்பவர் மூலமாக மதுரை ஜெய்கிந்த்புரத்தை சேர்ந்த கருப்பசாமி - பிரியா தம்பதியினருக்கு 2 லட்சத்திற்கு குழந்தையை விற்றுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். போலீசார் குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், குழந்தை விற்பனை நடந்தது உறுதியானது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தை விற்பனை தரகர் கார்த்தி, குழந்தையை வாங்கிய தம்பதி, குழந்தையின் தாத்தா உள்ளிட்ட 9 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
Tags : பச்சிளம் குழந்தை விற்கப்பட்டவிவகாரம்:9பேர் கைது