நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று மாலை ஆஜராக உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இருந்து விமானம் மூலம்சென்னை வந்தடைந்தார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராக நேற்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அவர் ஆஜராகாத நிலையில், இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வரும்படி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று சம்மன் ஒட்டப்பட்டது. உடனடியாக, சீமான் ஆதரவாளர் ஒருவர் சம்மனை கிழித்தார்.
மேலும் விசாரணைக்காக, காவல்துறையினர் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை, சீமான் வீட்டு காவலாளி தடுத்து நிறுத்தியதால், கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காவலாளி மற்றும் சம்மனை கிழித்த சீமான் ஆதரவாளர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி, சம்மனை படிப்பதற்காக, தான் அதனை கிழிக்க சொன்னதாக விளக்கம் அளித்துள்ளார்.
Tags : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.