நடிகை சரோஜா தேவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Editor / 14-07-2025 01:13:44pm
நடிகை சரோஜா தேவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (80) இன்று பெங்களூருவில் காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அழகிய முகபாவனைகள், நளினமான நடிப்பு ஆகியவற்றால் ‘அபிநய சரஸ்வதி’ என புகழப்பட்டவர். உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல மறக்க முடியாத வெற்றி படங்களில் நடித்தவர். அவருடைய இந்த மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாது என கூறியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via