தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “செப்டம்பர் 4ஆம் தேதி எனது தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெறும். வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாநாடாக நமது மாநாடு இருக்க வேண்டும்” என்றார். பாஜக தலைமை தங்கள் அணியை உதாசீனப்படுத்துவதால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்து ஆதரவாளர்களிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக கருத்து கேட்டு வருகிறார்.
Tags :