மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது 160 பாட்டில்கள் பறிமுதல்

by Editor / 18-01-2022 11:16:24pm
 மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது 160 பாட்டில்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஜனதா நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதனால் அங்கே வரும் ஆண்கள் மது குடித்துவிட்டு போதையில் தகராறு செய்வது, அரைநிர்வாணமாக சாலையில் படுத்து உறங்குவது, அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களிடையே பிரச்சனை செய்வது, அவ்வழியே செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பொதுமக்களுக்கு நிலவுவதாக அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பூ அரசுக்கு  புகார் அனுப்பி வேதனைத்தெரிவித்த நிலையில் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஜனதா நகர் பகுதியில்  போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக அதே பகுதியை சேர்ந்த மூவர் வீட்டிற்குள்ளேயே  மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவரவே  மூவரை கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 160 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories