மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 உதவித்தொகை

by Admin / 25-02-2026 01:27:36pm
மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 உதவித்தொகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று அவர் கன்னியாகுமரி நகராட்சியில் 1.45 கோடி மதிப்பு வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஐயன் திருவள்ளுவர் சிலையையும் அதன் வெள்ளிவிழா நினைவுகளையும் திறந்து வைத்ததோடு அகசுவரன் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரத்தில் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 90 புதிய வீடுகளையும் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கியதோடு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் சிலையையும் ராமசாமி ஐயர் நினைவு பூங்கா வளாகத்தில் பொன்னப்ப நாடார் சிலையும் திறந்து வைத்ததோடு நாகர்கோயில் கண் காலுடைய பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 25,000 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்பொழுது அவர் ஆறு முக்கிய திட்டங்களை அறிவித்தார் .குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய பழையாற்றிலிருந்து ₹28.20 கோடியில் புதிய திட்டம்.
₹25 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
₹1.20 கோடியில் ஏவிஎம் (AVM) கால்வாய் புனரமைப்பு.
களியக்காவிளை - கன்னியாகுமரி சாலை விரிவாக்கம்.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் ₹2 கோடியில் புதுப்பித்தல்.
கடலில் காணாமல் போகும் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 உதவித்தொகை மற்றும் கல்வி, திருமண உதவித்தொகைகள் உயர்வு. .நாகர்கோவிலில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.  முதலமைச்சர் மதியம் 12:30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வழியாகச் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்

 

Tags :

Share via
Logo