திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை

by Editor / 11-02-2022 04:03:51pm
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இரவு நேரங்களில் நேரங்களில் அதிகரித்துள்ளதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இரவு 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும்,  6 மணியில் இருந்து 9 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஜீப், கார் போன்ற இலகுரக வாகனங்கள்  செல்லவும்,இரவு 9மணிமுதல் அனைத்துவாகன போக்குவரத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் காவல்துறையினர்  கால்களில் விழுவதற்கு தயாரான  சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக 10 தேதி மாலை 6 மணி அளவில் பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.இரவு நேர போக்குவரத்து தடை நேரம் என்பதால் அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் முழுவதும் கால்நடைகள் லாரியில் உள்ளதாகவும்,அவற்றிற்கு தேவையான  அளவுக்கு தீவனம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என கூறி அந்த லாரியை மட்டும் அனுமதிக்குமாறு போலீசாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார் ஒரு கட்டத்தில் அவர் கால்நடைகளை ஏற்றிவந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டி காவல்துறையினரின் காலில் விழுவதற்கு முயற்சித்ததைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் விரைந்து உடனடியாக அவரை காலில் விழாமல் தடுத்து அந்த வாகனத்தை மட்டும் அனுமதித்தனர்.

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை
 

Tags : No-night traffic on Thimphu Hill Road

Share via