அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் நவம்வர் 27ல் இறுதி விசாரணை.

by Editor / 02-11-2023 10:54:24pm
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் நவம்வர் 27ல்  இறுதி  விசாரணை.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை நவம்பர் 27ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர், சிறப்பு நீதிமன்றங்கள், இந்த வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தவழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 

Tags : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு

Share via

More stories

Logo