காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரேசமுகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி படுகொலை.

by Editor / 02-11-2023 10:49:17pm
காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரேசமுகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி படுகொலை.

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் இளம் புதுமணத் தம்பதிகளான கார்த்திகா, மாரிச்செல்வத்தை வீடுபுகுந்து வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாரிச்செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரேசமுகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி படுகொலை.

Share via
Logo