நியாயமாக செயல்படும் குவாரிகளுக்கு அனுமதி சிட்டு வழங்க கோரிக்கை.

by Staff / 27-06-2025 08:41:13am
நியாயமாக செயல்படும் குவாரிகளுக்கு அனுமதி சிட்டு வழங்க கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த கல்குவாரிகள் சில கல்குவாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைத்து கல் குவாரிகளுக்கும் நடை சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது கல்குவாரிகளில் அதிகாரிகள் அளவீடு செய்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு உரிய அபராதம் விதிக்கவும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் சில குவாரி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நியாயமான முறையில் செயல்பட விரும்பும் குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரிகள் முறைகேடு உள்ள குவாரிகளை டூரோன் சர்வே மூலம் அளந்து அபராதம் விதிக்கவும் நியாயமான முறையில் செயல்படும் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Tags : நியாயமாக செயல்படும் குவாரிகளுக்கு அனுமதி சிட்டு வழங்க கோரிக்கை.

Share via