காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

காரைக்காலில் காலரா பரவலை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசரநிலை குடும்ப நலன் மற்றும் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் மற்றும் சுகாதார மற்ற உணவுகளை வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. தூய்மை பணிகள் மேற்கொள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .இந்த நிலையில் தடுப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
Tags :