சொர்க்கவாசல் திறப்பு பிரபந்தம் பாடுவதில்  வடகலை - தென்கலை தகராறு.

by Editor / 10-01-2025 07:17:20am
சொர்க்கவாசல் திறப்பு பிரபந்தம் பாடுவதில்  வடகலை - தென்கலை தகராறு.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில், பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதியுள்ள நிலையில், வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதம் செய்ததால் சிறிதுநேரம் பரபரப்பு நீடித்தது. இதையடுத்து, காவல்துறையினர், கோயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் பாட அனுமதித்தனர். அதன் பின்னரும் பிரச்சனை செய்தவர்கள் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

 

Tags : சொர்க்கவாசல் திறப்பு பிரபந்தம் பாடுவதில்  வடகலை - தென்கலை தகராறு.

Share via