மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்

by Editor / 29-12-2021 04:30:54pm
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்

 

மதுரை மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையின் சுவரின் மீது ஏறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கிருக்கக்கூடிய செங்கற்களை  பெயர்த்தெடுத்து மதுரை மத்திய சிறை சாலையிலும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதால் மிகுந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினை தாக்க முயன்றுள்ளதாகவும் அந்த தாக்குதலுக்கு பயந்து அவர்கள் சுவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறைத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

. சிறைத்துறை காவல்துறையினர் அந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாலையில் செல்லக்கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories