நாளை தமிழகம் வருகிறார் ராகுல்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை காலை உதகை வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கோவை வரும் ராகுல், அங்கிருந்து சாலை பயணமாக உதகை செல்கிறார். உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்வில் பங்கேற்கும் அவர், பின் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத்தொடர்ந்து, தனது தொகுதியான வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல் வருகையையொட்டி, கோவை, உதகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















