ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது வழக்கு, 02 நபர்கள் கைது, , 12 நபர்கள் மீது வழக்கு,

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலபத்திராமபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான 38 லட்சம் மதிப்பிலான 40 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி கைரேகையிட்டு தன்னிடமிருந்து நிலம் அபகரிக்கப்பட்டதாக தேனி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் காளிமுத்து என்பவர் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆரோக்கியராஜ் அவர்கள்(DCB) தலைமையில், காவல் ஆய்வாளர் திருமதி. சந்திசெல்வி அவர்கள்(ALGSC) மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. மாரிச்செல்வி அவர்கள்(ALGSC) ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் புகார் அளித்த காளிமுத்து 1995 ல் பண்டாரகண்ணு என்பவருக்கு பவர் அளித்து பின்பு அதை மூன்று மாதத்தில் ரத்து செய்துள்ளார், இருப்பினும் பண்டாரகண்ணு உட்பட 12 நபர்கள் போலி கிரைய பத்திரம் தயார் செய்து அதில் ஆள்மாறாட்டம் செய்து போலியான கைரேகை இட்டு நிலத்தை அபகரித்தது விசாரணையில் தெரியவந்தததன் பேரில் 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதில் பலபத்திராமபுரம் போஸ்ட் அமுதா புரத்தை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் பாலமுருகன் @ பாலமுருகேசன் மற்றும் ராமசாமி @ மகாராஜன் என்பவரின் மகன் இசக்கிமுத்து ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Tags :