ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட இபிஎஸ் உத்தரவு

by Staff / 14-02-2024 04:55:28pm
ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட இபிஎஸ் உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்., 24ஆம் தேதி முதல் பிப்., 28 வரை 5 நாட்களுக்கு அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், 'மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு என பல்வேறு அமைப்புகளைகச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via