கருப்பையில் குழந்தையின் மூளை அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவர்கள் புதிய அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக உள்ளனர். தாய் கர்ப்பமாக இருந்தபோது குழந்தையின் மூளையில் ஒரு அரிய இரத்த நாளக் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. இதற்காக மருத்துவர்கள் குழு செய்த சவாலான அறுவை சிகிச்சையில், தாயும் குழந்தையும் காப்பாற்றப்பட்டனர். தற்போது இந்த நோய்க்கு குழந்தை பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கொஞ்சம் தாமதமானால் குழந்தை இறந்துவிடுகிறது. பாஸ்டன் மருத்துவர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து 34 வார கருவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
Tags :