சென்னையில், ஹெல்மெட் அணியாததற்காக 3926 வழக்குகள் பதிவு

by Editor / 23-05-2022 10:40:01pm
சென்னையில், ஹெல்மெட் அணியாததற்காக 3926 வழக்குகள் பதிவு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 இருசக்கர ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணித்த  பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் எச்சரி விடுக்கபட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும் என்றும் 
அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

Tags : 1,903 cases charged against motor two wheeler riders and 2,023 cases were charged against pillion riders for not wearing helmet.

Share via