சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த போது விபத்து. ஒருவர் பலி...

by Staff / 25-01-2024 04:58:52pm
சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த போது விபத்து. ஒருவர் பலி...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே காட்டுப் பகுதியில் உள்ள மோட்டார் அறை தரைமட்டமாகி கிடந்துள்ளது. இதயைடுத்து அப்பகுதிக்குசென்றவர்கள், சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தாலுகா போலீசார் இன்று காலை அந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போது மோட்டார் அறையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதும் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டமானது. மேலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட மீனம்பட்டியைச் சேர்ந்த அஜீத்(23) என்பவர் உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories