ஜான் பாண்டியன் மகள் தேர்தலில் போட்டி

by Staff / 14-02-2024 05:20:22pm
ஜான் பாண்டியன் மகள் தேர்தலில் போட்டி

தமிழக மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் உரக்கச் சொல்ல யாருமே இல்லை என்ற குறையை நான் போக்குவேன் என தமமுக மாநில மகளிர் அணி தலைவி வினோலின் நிவேதா தெரிவித்துள்ளார். தமமுக தலைவர் ஜான் பாண்டியனின் மகளும் மருத்துவருமான வினோலின் நிவேதா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சியினரின் முடிவைப் பொருத்தது. சென்னையில் போட்டியிடுவேன் என சொல்லிவிட முடியாது. கட்சியின் உயர்மட்டக்குழுவின் அறிவுறுத்தல் படி போட்டியிடுவேன். நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியலைக் கண்டு வியந்துள்ளேன். அவர் ஒரு இரும்பு மங்கை. அவர் போன்று வரவேண்டும் என ஆசை உள்ளது' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo