குண்டர் தடுப்பு சட்டத்தில் 24 குற்றவாளிகள் கைது

by Staff / 01-12-2023 04:47:57pm
குண்டர் தடுப்பு சட்டத்தில் 24 குற்றவாளிகள் கைது

சென்னையில் தொடர் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரு வாரத்தில், 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட, 434 குற்றவாளிகள் உட்பட, 639 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo