அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

by Staff / 20-11-2022 01:06:04pm
அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

தென் கொரியாவையும், அமெரிக்காவையும் பல ஆண்டுகளாக வட கொரியா அச்சுறுத்தி வருகிறது. இந்நநிலையில் வெள்ளியன்று மிக சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஏவுகணை 15,000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து அமெரிக்காவை எட்டும் திறன் கொண்டது என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகசு ஹமடா கூறியிருந்தார் ..இதைப் பற்றி தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் எழுப்பிய புகார்களின் அடிப்படையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையில் நாளை இதுக் குறித்த விவாதம் நடைப்பெற உள்ளது. இந்நிலையில், வட கொரியாவை அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கிம் ஜாங் உன் நேரடி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சமீப காலங்களில் ஏவுகணை சோதனைகளை வட கொரியா அதிகரித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

Tags :

Share via