தென்காசி மாவட்டத்திற்கு வந்த எடப்பாடியை வரவேற்ற அதிமுகவினர்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்பு என்கின்ற கோஷத்தோடு அதிமுகவினுடைய பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரத்தை முன்னெடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்த அவர் நேற்று
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.அப்போது பேசிய அவர், “திமுக கட்சி கூட்டணியை நம்பியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி மக்களை நம்பி இருக்கும் கூட்டணி. மக்கள்தான் நீதிபதிகள், கூட்டணி காலத்திற்கேற்ப மாறும். ஆனால் மக்கள் நிலையானவர்கள்; மக்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் நிராகரித்துவிட்டனர். வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.இதன் தொடர்ச்சியாக 4 ஆம் தேதி இரவு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அவருக்கு ஆம்பூர் பகுதியில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக அவர் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான விடுதியில் தங்குவதற்காக சென்றார் அங்கு "மார்கழி" என்கின்ற அறையில் அவர் ஓய்வு எடுத்தார்.இன்று 5 ம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு கட்சிகள் சார்ந்த தொண்டர்கள் அதிமுகவில் இணையும் விழாவும் அதன் பின்பு விவசாயிகளோடு சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகின்றன மாலை 5 மணி அளவில் தென்காசி வேன் ஸ்டாண்ட் பகுதியிலும் அதன் தொடர்ச்சியாக ஆலங்குளம் அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் அவர் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தொடர்ந்து ஐந்தாம் தேதி இரவு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் உடைய விடுதியில் தங்குகிறார். ஆறாம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர் பின்னர் அங்கிருந்து சங்கரன் கோவில் சென்று பின்னர் ராஜபாளையத்தில் இரவு ஓய்வு எடுக்கிறார்
Tags : தென்காசி மாவட்டத்திற்கு வந்த எடப்பாடியை வரவேற்ற அதிமுகவினர்.