நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்.

by Staff / 05-08-2025 07:56:33am
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்.

தமிழகத்தில் இன்று (ஆக.5) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்

Share via