வெடிமருந்து எடுத்து சென்ற 2 பேர் கைது
மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் அருகே மேட்டூர் வனத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 2 பேர், மோட்டார் சைக்கிளில் வெடி மருந்து எடுத்து சென்றது தெரிய வந்தது. உடனேஇரண்டுமோட்டார் சைக்கிள் டெட்டினேட்டர் என்ற வெடிமருந்து மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது அவர்களுக்கு அதற்கான ஆவணங்களை உரிமம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இவர்களை வனத்துறையி மேட்டூர்போலீசில் ஒப்படைத்தனர். மேட்டூர்போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் நங்கவள்ளி அடுத்த பெரிய சோரகை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் வயசு 27 குமார் வயசு 35 என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் உரிமம் இன்றி வெடிமருந்து எடுத்துச் செல்வதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Tags :