டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

by Staff / 10-09-2023 01:03:09pm
டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மதுரை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை, இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மதுரை மாநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த செய்தியை அறிந்த குடிமகன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo