டீக்கடை மாஸ்டர் தற்கொலை

by Staff / 20-10-2023 05:35:47pm
டீக்கடை மாஸ்டர் தற்கொலை

தஞ்சாவூர் மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனையில் இருந்து வந்த அய்யப்பன் கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அய்யப்பன் மனைவி அரியலட்சுமி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo