இமயம் போல் நிமிர்ந்து இருக்க வேண்டிய நான்,அ.தி.மு.கவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்- வைகோவேதனை

by Admin / 15-02-2026 06:09:07pm
 இமயம் போல் நிமிர்ந்து இருக்க வேண்டிய நான்,அ.தி.மு.கவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்-  வைகோவேதனை

ஈரோட்டில் மாதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, எங்கோ இமயம் போல் நிமிர்ந்து இருக்க வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன் என்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததே தனது அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்கு நூறாக்கியது என்றும் அது ஒரு மன்னிக்க முடியாத தவறான முடிவு என்னும் குறிப்பிட்டதோடு தன்னை 19 மாதங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைத்த அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது மிகப்பெரிய பிழை என்றும் தம் கடந்த கால அரசியல் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான உண்மைகளை அவர் பகிரங்கமாக ஒத்துக் கொண்டதோடு தற்பொழுது திமுக கூட்டணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசாமல் கூட்டணிக்கு எந்த வித குந்தகம் விளைவிக்காமல் மதிமுக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெளிவுபட தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories

Logo