மோடியின் கியாரண்டி இதுதான் - அண்ணாமலை பதிலடி
கோயம்புத்தூரில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மோடி என்ன கியாரண்டி கொடுப்பார்? என ஸ்டாலின் கேட்பதாக நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என கியாரண்டி கொடுப்பார்” என பதில் அளித்துள்ளார்.
Tags :