மோதல்  18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த  குருநானக் கல்லூரி நிர்வாகம்

by Editor / 22-08-2023 08:45:47am
மோதல்  18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த  குருநானக் கல்லூரி நிர்வாகம்

சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை மாணவர்களிடையே மீண்டும் மோதல் வெடித்த நிலையில், ஒரு மர்மக்கும்பல் கல்லூரி வளாகத்துக்குள், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வெளியானது.

அது பலத்த சத்தத்துடன் வெடித்ததில், அங்கிருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கண்டனர். இந்நிலையில் குருநானக் கல்லூரியில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு அல்ல, சாதாரண பட்டாசு என்று  காவல்துறை விளக்கம் அளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட குழு மோதல் சம்பவம் தொடர்பாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :  குருநானக் கல்லூரி

Share via

More stories

Logo