பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு காலாவதியான அரசு பேருந்து இயக்கியது கண்டுபிடிப்பு.

by Editor / 01-11-2023 10:45:25pm
பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு காலாவதியான அரசு பேருந்து இயக்கியது கண்டுபிடிப்பு.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள், மற்றும் அரசு பேருந்துகள், உள்ளிட்டவைகள் ஏர்ஹாரன் என்று அழைக்கப்படும் காற்று ஒழிப்பான்களை வைத்து சத்தம் எழுப்புவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததை தொடர்ந்து இன்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்பொழுது பல தனியார் பேருந்துகள் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்  என்று அழைக்கப்படும் காற்று ஒளிபான்களை பொறுத்தியிருந்தது கண்டறியப்பட்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தென்காசி நகராட்சி தூய்மைப் பணிக்காக இயக்கப்படும் வாகனத்திலும் ஏர்ஹாரன்  இருப்பது கண்டறியப்பட்டு அதையும் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வந்த அரசு பேருந்தை   நிறுத்தி சோதனை செய்ததில் அரசு பேருந்திலும் ஏர்ஹாரன்  இருப்பது கண்டறியப்பட்டு அதுவும் அப்புறப்படுத்தப்பட்டது மேலும் அந்தப் பேருந்தின் வாகன பதிவு உள்ளிட்ட ஆய்வு செய்ததில் அந்தப் பேருந்தின் ஆயுட்காலமான 15 ஆண்டுகளை நிறைவு செய்து இன்னும் புதுப்பிக்கப்படாமல் பேருந்து இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மாற்று பேருந்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த பேருந்து உடனடியாக பேருந்து நிலையத்தில் ஓரத்தில் நிறுத்தி வைத்து அதனை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.மேலும் இந்த பேருந்தை அரசு பணிமனையில் நிறுத்தி வைக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார் தொடர்ந்து தென்காசி பகுதிகளில் இந்த சோதனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.பணமனைதரப்பில் விசாரணை செய்தபோது கிளைமேலாளர் தெரிவிக்கும் பொது அந்தபெருந்து 26.09.2023 அன்றுபேருந்தின் ஆயுட்காலம்  புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.இருப்பினும் பேருந்தை பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.-

 

Tags : பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு காலாவதியான அரசு பேருந்து இயக்கியது கண்டுபிடிப்பு.

Share via