தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தமாட்டோம் - முதல்வர் அதிரடி

by Staff / 12-03-2024 02:22:20pm
தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தமாட்டோம் - முதல்வர் அதிரடி

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories