ஜெய்லர் படத்தினுடைய காட்சிகளை செல்போனில் படம்பிடித்து அப்டேட் செய்து...

by Admin / 10-08-2023 11:41:52am
 ஜெய்லர் படத்தினுடைய காட்சிகளை செல்போனில் படம்பிடித்து அப்டேட் செய்து...

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமாரினுடைய இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய்லர் இன்று காலை வழக்கமாக ஒன்பது மணிக்கு படம் 900 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளி வருவதற்கு முன்பாக வெளி மாநிலங்கள் வெளிநாட்டுகளில் நேற்றையதினம் திரையிடப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் மற்றும் அல்லாது பொதுவான ரசிகர்களும் படத்தினுடைய காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அப்டேட் செய்து வருகின்றார்கள் .ஆகஸ்ட் 5-ஆம் தேதிஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையான பொழுது ஒரு கோடிக்கு மேலாக  டிக்கெட்கள் விற்பனையாகி ரஜினியின் செல்வாக்கு சரியவில்லை. என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்கிற கருத்தை வலுப்படுத்தும் விதமாக நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நேரு ஸ்டேடியத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ,கிட்டத்தட்ட  1மணி நேரமாக தன்னுடைய பயணத்தினுடைய வெற்றிகளையும் ஏற்பட்ட தோல்விகளையும் எதனால் தான் மேலும் மேலும் உச்சத்திற்கு செல்ல முடியாமல் போனதற்கு காரணமாக இருந்த குடிப்பழக்கம் பற்றியும் அவர் சொல்லிய கருத்தும் சூப்பர் ஸ்டார் குறித்த கதைகளும் ரசிகர்களை மிக வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தை திரையரங்கில்  பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டி விட்ட காரணத்தினால், இன்றைக்கு ரஜினியை ரசிகர்கள் மட்டுமல்லாதது, பொதுவான ரசிகர்களும் படத்தை பார்ப்பதற்கு திரையரங்கில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில மணித்துளிகளில் படத்தைப் பற்றிய முழுமையான விமர்சனம் வெளிவந்துவிடும். படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் ரசிகர்களை அது எந்த அளவிற்கு வசீகரித்து இருக்கிறது என்பது பணத்தின் காட்சி முடிந்த பிறகு தான் தெரிய வரும்.

 

Tags :

Share via

More stories