சொகுசு வாழ்க்கைக்காக சொகுசுக்காரில் ஆடு திருடிய கும்பல் கைது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் 20 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டின் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளில் ஆடுவளர்ப்பது பிரதான தொழிலாக இருந்துவருகிறது.வீட்டுக்கு 5 முதல் 20 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகள் இரவு நேரங்களில் திருடு போவதாக ஆட்டின் உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர், தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் கவனத்திற்கு வந்தததைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ஆடு திருட்டு கும்பலை பிரிப்பதற்கான முயற்சியில் விளாத்திகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வாகன சோதனைகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக போலீசார் வேம்பார் பகுதியில் சோதனைச்சாவடி சோதனை மேற்கொண்டனர் அப்போது வேகமாக வந்த இனோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் ஆடைகள் வாயில் பிளாஸ்திரி போட்டு கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது, உடனடியாக அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் சொகுசு காரில் பல்வேறு பகுதியில் சென்று ஆடுகளை திருடி விற்பனை செய்வது தெரியவந்தது.
இவர்கள் திருடும் ஆடுகளை காரைக்குடி பகுதியில் உள்ள முகமது அராபாத் மற்றும் ஆகிய இருவரிடம் கொண்டு கொடுத்து விற்பனை செய்வதும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன இவர்கள் 20 இடங்களை பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நூறு ஆடுகளை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது இவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்திய 3 சொகுசுக்காரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags :