வெள்ள பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளார். .அவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் பங்கேற்க உள்ளார் .கடந்த ஒரு வாரமாக புயல்காரமாக, சென்னை உள்ளிட்டநான்கு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதோடு பல்வேறு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு ,குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர் ..இந்நிலையில், வெள்ளச் சேத பகுதிகளை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் 5060 கோடி ரூபாய் நிவாரணமாக தர வேண்டும் என்று கடிதம் எழுதியதோடு பாராளுமன்ற உறுப்பினர் மேலவை உறுப்பினர்கள் வழியாகவும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது தமிழகஅரசு என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :