கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றதாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜல்லி மேடு பகுதியில் சேர்ந்த முருகன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மாலா தொடர்ந்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாலாவிடம் கூகுள் பேய் மூலம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பணத்தை அனுப்புமாறு கூறிய ஆடியோ வெளியானது. இது குறித்து விசாரித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags :