விமானத்தில் இருமுடி பையை கொண்டு செல்லபக்தர்களுக்கு அனுமதி

by Staff / 23-11-2022 12:19:01pm
 விமானத்தில்  இருமுடி பையை கொண்டு செல்லபக்தர்களுக்கு அனுமதி

விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் அங்கு கோவில்லுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து வரும் இவர்கள், விமானத்தில் தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பையை கொண்டு செல்ல இதற்கு முன் அனுமதி மறுப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களுக்கு ஏற்படும் நிலை குறித்து கோரிக்கை வைத்த நிலையில், ஜனவரி 20ம் தேதி வரை விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories