கதிர் அறுவடை செய்யும் வாகனம் குட்டையில் சிக்கியது. மூதாட்டி நீரில்மூழ்கி பலி 

by Editor / 16-02-2023 03:00:36pm
 கதிர் அறுவடை செய்யும் வாகனம் குட்டையில் சிக்கியது. மூதாட்டி நீரில்மூழ்கி பலி 

தென்காசி மாவட்டம் கேசவபுரம் பகுதியில் பொட்டை குளம் புறவு பகுதியில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன, இங்கு முருகேசன் என்பவரது விளை நிலங்களும் உள்ளது. இந்த நிலங்களை அந்தப் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நெல் விளைந்து அறுவடை தற்போது கேசவபுரம் பகுதியில் நடைபெற்று வருகின்றன, இதன் தொடர்ச்சியாக இன்று ராஜேந்திரன் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த அறுவடை வாகனம்  கம்பனேரி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான இந்த அறுவடை வாகனத்தை  செங்கோட்டை கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மகேஷ் என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வயலை ஒட்டி உள்ள பகுதியில் 10அடி ஆழத்தில் குளம் போன்று சிறிய குட்டையில் நீர் தேங்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் கற்குடி அருகே உள்ள வேம்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த அழகம்மாள் என்கின்ற மூதாட்டி பாத்திரத்தை கழுவியுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக அறுவடை செய்யும் வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. அப்பொழுது ஓட்டுநர் மகேஷ் மூதாட்டியை சத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக கதிர் அறுவடை செய்யும் வாகனம் பின்னோக்கி வந்ததால் அதனை கட்டுப்படுத்த முடியாமல்  அந்த குட்டைக்குள் இறங்கியது இதில் மூதாட்டி மீது அந்த வாகனம் மோதி அவரும் பள்ளத்திற்குள் நீர் கிடந்த பகுதியில் சிக்கிக் கொண்டார் இதில் மூதாட்டி பரிதாபமாக பலியானார். இதன் தொடர்ச்சியாக மூதாட்டியின் உடலை மீட்பதற்காக கதிர் அறுக்கும் இயந்திரத்தையும் மீட்டால் மட்டுமே மோதாட்டி உடலை மீட்க முடியும் என்கின்ற காரணத்தினால் நான்கு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மூன்று இயந்திரங்கள் கதிர் அறுவடை செய்யும் வாகனத்தை வெளியே மீட்க  நீண்ட நேரம் போராடி மீட்டது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் சுமார் 10 அடி ஆழம் கொண்ட அந்த குட்டையில் இறங்கி மூதாட்டினுடைய உடலை தேடி எடுத்தனர். தொடர்ச்சியாக மூதாட்டியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புளியரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கதிர் அறுவடை செய்யும் இயந்திரத்தின் உடைய ஓட்டுனர் மகேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


 

 

Tags :

Share via

More stories