கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள அமீர்பெட் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags : Telangana Governor Tamilisai Soundarrajan got Corona Booster Vaccination