இந்த லட்டு விவகாரம் அதிர்ச்சியை மனவேதனையையும் உருவாக்கி உள்ளது.. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

by Admin / 21-09-2024 09:29:13am
 இந்த லட்டு விவகாரம்  அதிர்ச்சியை மனவேதனையையும் உருவாக்கி உள்ளது.. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

திருப்பதி கோவிலில் தயார் செய்யப்படும் லட்டில் மீன், எண்ணெய் மாட்டுக் கொழுப்பு, பாமாயில் கலந்திருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதை தொடர்ந்து லட்டு குறித்த கருத்துக்கள் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது.. பல்வேறு நிலைகளில் கருத்துக்கள் பேசப்பட்டாலும் புனிதமான லட்டுவில் மீன், எண்ணெய் மாட்டுகொழுப்பு ,பாமாயில் கலந்திருப்பதாக நெய்யை மாதிரிக்கு எடுத்துக் கொண்ட ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நெய் வழங்கக்கூடிய நிறுவனம் இது தவறான பொய் பிரச்சாரம் என்றும் நாங்கள் வழங்கும் நெய் சுத்தமானது என்றும் எந்தவிதமான சோதனைக்கும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் நெய் தயார் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி இது அரசியலின் திட்டமிட்ட ஒரு தவறான பிரச்சாரம் என்று கூறியுள்ளார்.. காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய். எஸ். ஆர் சர்மிளா சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளார்.. திருப்பதி வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு இந்த லட்டு விவகாரம் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை மனவேதனையையும் உருவாக்கி உள்ளது..

 

 இந்த லட்டு விவகாரம்  அதிர்ச்சியை மனவேதனையையும் உருவாக்கி உள்ளது.. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
 

Tags :

Share via