மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா ?முதல்வர்

by Staff / 12-11-2022 12:43:22pm
மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா ?முதல்வர்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது.ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும். மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது" என கடுமையாக விமர்சித்து பேசினார்.

 

Tags :

Share via

More stories

Logo