அதிமுக போராட்டத்திற்கு மேலும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனும் வருகை.

by Staff / 27-06-2024 02:09:46pm
அதிமுக போராட்டத்திற்கு மேலும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனும் வருகை.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த மறுக்கப்பட்டதை கண்டித்தும், அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் இன்று (ஜூன் 27) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதத்திற்கு காலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்து ஆதரவை தெரிவித்திருந்தார். தற்போது இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனும் எடப்பாடியை சந்தித்து போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via